ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை.!
ஜம்மு காஷ்மீரில் நேற்றிரவு பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ராணுவப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது, இருதரப்பினரிடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த தாக்குதல்களில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
#KulgamEncounterUpdate: 01 local #terrorist neutralised. Identification & affliation being ascertained. Incriminating materials including arms & ammunition recovered. Search going on. Further details shall follow.@JmuKmrPolice https://t.co/f2AdOK0nqa
— Kashmir Zone Police (@KashmirPolice) June 26, 2023
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பயங்கரவாதியின் விவரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டன.
சமீப நாட்களாக, ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.