இவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
காலிப்பணியிடங்கள் உள்ள கடைகளில் பணியாளர்களை நியமிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு.
தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது, 500 சில்லறை விற்பனை மதுக்கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 500 மதுபான சில்லறை கடைகள் கடந்த 22-ஆம் தேதி முதல் மூடப்படுகிறது என்று தமிழக அரசு இன்று அறிவித்தது.
இதன்பின் தமிழ்நாட்டில் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் வெளியானது. அதில், சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதுபோன்று, மதுரை மண்டலத்தில் – 125, திருச்சி மண்டலத்தில் – 100 கோவை மண்டலத்தில் – 78, சேலம் மண்டலத்தில் – 59 என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை வழங்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, மூடப்பட்ட 500 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் வேலை என்று காலிப்பணியிடங்கள் உள்ள கடைகளில் பணியாளர்களை நியமிக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள கடை ஊழியர்களின் மாவட்ட முதுநிலை, அதாவது, மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் செய்ய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பின்பற்றப்பட வேண்டும். உதவி விற்பனையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய இடங்கள் உள்ள கடை ஊழியர்களின் பட்டியல், மாவட்ட மேலாளர்/முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள், டிப்போக்களில் உள்ள அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்றுள்ளனர்.