WC23: இந்தியா விளையாடும் போட்டிகள், எங்கு? எப்போது? முழு விவரம்…

India matches WC23

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையில் இந்தியா விளையாடும் போட்டிகள்…

ஐசிசி 2023 க்கான ஒருநாள் உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் அகமதாபாத் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இறுதிப்போட்டியும் நவம்பர் 19இல் இதே அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

Ind icc fixtures
Ind icc fixtures [Image- Twitter/@BCCI]

இதில் 10 அணிகளும் மற்ற 9 அணிகளுடனும் மோதும் போட்டிகளின் முடிவில் 4 இடங்களைப்பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா சூப்பர் லீக் சுற்றில் 9 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியுடன் சென்னை சேப்பாக்கத்தில் வரும் அக்டோபர் 8 இல் மோதுகிறது.

இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அக்டோபர் 11 இல் டெல்லியிலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15 இல் அகமதாபாத்திலும், அடுத்த போட்டியில் அக்டோபர் 19 இல் வங்கதேசத்துக்கு எதிராக புனேவிலும் இந்தியா விளையாடுகிறது.

icc 23
icc 23 [image -icc]

இந்திய அணியின் 5-வது போட்டி அக்டோபர் 22 இல் நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலாவிலும், 6-வது போட்டி அக்டோபர் 29 இல் லக்னோவில் இங்கிலாந்துக்கு எதிராகவும், 7-வது போட்டி நவம்பர் 2 இல் மும்பையிலும் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் Q2அணியுடனும், 8-வது போட்டி நவம்பர் 5 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவிலும், 9-வது போட்டி நவம்பர் 11இல் பெங்களுருவில் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் Q1 அணியுடனும் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்