சிதம்பரம் கோயிலை இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை…அமைச்சர் சேகர் பாபு பேட்டி.!
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், இந்துசமய அறநிலையத்துறை இதில் முடிவெடுக்கலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. கனகசபை மீது வழிபாடு செய்ய பக்தர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை அனுமதி வழங்கிய நிலையிலும் தீட்சிதர்கள், திருமஞ்சனம் எனக்கூறி அனுமதி மறுத்தனர்.
இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கூறும்போது தீட்சிதர்கள் சிதம்பரம் கோயிலில் அதிகார மையத்தினை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் வைத்தது தான் சட்டம் என்பது போல், தீட்சிதர்கள் செய்லபட்டு வருகிறார்கள். மேலும் தேவையான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலை, இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.