இன்ஸ்டாவை போல இனிமேல் டெலிகிராமிலும்..? வெளியாகவுள்ள அசத்தல் அம்சம்..!
டெலிகிராம் ஆனது இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை வெளியிடவுள்ளது.
செய்திகளை பரிமாறிக்கொள்ளும் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஈர்க்க புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவற்றிக்கு போட்டியாக டெலிகிராமும் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலிகளில் உள்ள அம்சங்களில் சில டெலிகிராமில் ஏற்கனவே உள்ளன.
தற்பொழுது, டெலிகிராம் ஆனது பயனர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு அட்டகாசமான அம்சத்தை வெளியிட உள்ளது. அது என்னவென்றால் இனிமேல் பயனர்கள் வாட்ஸ்அப் மட்டும் இன்ஸ்டாகிராமில் உள்ளது போல டெலிகிராமிலும் ஸ்டோரிகளை பதிவிட்டுக்கொள்ளலாம்.
Telegram introduces stories.#Telegram #stories pic.twitter.com/2tKuiD1wce
— Abhishek Yadav (@yabhishekhd) June 27, 2023
இந்த அம்சமானது ஜூலை மாதம் பயனர்களுக்கு கிடைக்கும் என்று டெலிகிராம் தலைமை நிர்வாக அதிகாரி பாவேல் துரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், பலமுறை டெலிகிராமில் ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை கொண்டுவருமாறு பயனர்கள் எங்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் பெறும் கோரிக்கைகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஸ்டோரி தொடர்பானவை. முன்னதாக, ஸ்டோரிகளை பதிவிடும் அம்சம் ஏற்கனவே பல செயலிகளில் இருப்பதால் ஆரம்பத்தில் நாங்கள் இதை எங்களது செயலியில் இணைக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.