அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதிய மாணவன்..! மாணவனை நேரில் சந்தித்த அமைச்சர்..!

Ma Subramanian

தனக்கு கடிதம் எழுதிய மாணவனை நேரில் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். 

கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் ஜெய் பிரணவ் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில்,  நான் கோயமுத்தூர் மாவட்டம் காளப்பட்டி சாலை நேருநகரில் உள்ள எஸ். எஸ்.பி வித்யா நிகேதன் பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கிறேன் .வழக்கறிஞர் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என பன்முகதிறன்கள் கொண்ட உங்களுக்கு கடிதம் எழுதுவதில் பெருமகிழ் அடைகிறேன் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த ச்சி நீங்கள்,’முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்ற வார்த்தைக்கிணங்க வாழக்கையில் பல சாத்னைகளை புரிந்து கொண்டுருக்கிறீர்கள்.

குறிப்பாக நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சரான பிறகு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பெரும்பாலான மக்கள் சென்ற வண்ணம் உள்ளனர். காரணம், அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார
நிலையங்களிலும் உள்ள சுகாதாரம், தரமான மருந்துகள் மற்றும் நவீன உபகரணங்கள்.

“மாரத்தான் மன்னன்” என்னும் அடைமொழிக்கிணங்க 100-மாரத்தான்களில் கலந்து உலக சாதனை புரிந்த உங்களை கண்டு வியக்கிறேன். இந்த வயதிலும், சுறு சுறுப்போடும், தன்னம்பிக்கையோடும் இருக்கும் நிங்கள் இந்த சிறுவனுக்கு ஊக்கமளிக்கும் சில வரிகள் உங்களிடமிருந்து பதில் கடிதமாக எழுதவேண்டும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என எழுதியுள்ளார்.

இந்த நிலையில், மாணவன் ஜெய் பிரணவ்வை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து, அந்த மாணவனுடன் உணவருந்தியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அதனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 20 நாட்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பயிலும் சிறுவன் பிரணவ் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.அக்கடிதத்தை படித்துவிட்டு பதில் சொல்ல சொல்லியும் இருந்தார்.பதில் கடிதம் எழுதுவதை காட்டிலும் நேரடியாக சந்திக்க வேண்டும் என்கின்ற ஆவல் எனக்கும் இருந்தது,அந்த வகையில் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்காக இன்று கோவையிலிருந்த நான் அச்சிறுவனுடன் சிற்றுண்டி உண்டது மகிழ்ச்சியாக இருந்தது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்