செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது!
சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் வாதம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணை நடந்து வருகிறது. அப்போது, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்மனை கையெழுத்து போட்டு பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்து விட்டதாகவும் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் வாதம் முன்வைத்து வருகிறார். அவர் கூறுகையில், இது சம்பந்தமான ஆவணங்கள் ஜூன் 16ம் தேதி தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நீதிமன்ற காவலில் வைக்கும்போது, இதையெல்லாம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என கூறியுள்ளனர்.
செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டது நிரூபணமாகியுள்ளது. சட்டவிரோத கைதை அமர்வு நீதிமன்றமும் மனதை செலுத்தி ஆராயாமல் இயந்திரத்தனமாக ஏற்றுள்ளது. காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை. கைதுக்கான மெமோவில் செந்தில் பாலாஜி கையெழுத்திட மறுத்தார் என்பது குறித்து பதிவுகள் இல்லை. காரணம் கூறாமல் கைது செய்தது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என மனைவி மேகலா தரப்பில் வாதம் வைக்கப்பட்டு வருகின்றனர்.