தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டெடுப்பு!

Minister Thangam Thennarasu

தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானையோடு ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. 

துலுக்கர் பட்டியில் நடைபெற்றுவரும் அகழ்வாய்வில், தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த  பதிவில்,தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக, திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர் பட்டியில் நடை பெற்று வரும் அகழ்வாய்வில், தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானையோடு ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பொருநை ஆற்றின் கரையில் நிலவிய ஆதிச்சநல்லூர் பண்பாட்டின் காலத்தை நிலை நிறுத்துவதில் நம்பியாற்றின் அருகே துலுக்கர்பட்டியில் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி பெரும் துணை புரிகின்றது.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்