Tamil News Live Today: தக்காளிகளை கொள்முதல் விலைக்கே வழங்க திட்டம்..!
தக்காளிகளை கொள்முதல் விலைக்கே வழங்குவதற்கு, தமிழகத்தில் உள்ள 65 பசுமை பண்ணை காய்கறி அங்காடி மற்றும் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் நுகர்வோருக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தக்காளியை பதுக்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பெரிய கருப்பன் எச்சரித்துள்ளார்.