சிறப்பு மலை ரயில் சேவை வரும் ஜூலை 30ம் தேதி வரை நீட்டிப்பு.!
உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதகையில் கோடைகாலம் முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் வருகை தருகின்றனர். இதற்காக, கடந்த ஒரு மாதகாலமாக இயக்கப்பட்ட உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு உதகை சென்றடையும். இந்த சிறப்பு மலை ரயில் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உதகை மலை ரயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதுபோல, இந்த சிறப்பு ரயிலுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக ஜூன் 30ம் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.