சிதம்பரம் கோவிலில் தொடரும் பரபரப்பு.! கனகசபையை பூட்டி வைத்து தீட்சிதர்கள் போராட்டம்.! பேச்சுவார்த்தை நடத்த முடிவு.!

Chidambaram natarajar koil

சிதம்பரம் கோவிலில் கனகசபையை பூட்டி வைத்து தீட்சிதர்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு மறுத்ததால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அவ்வப்போது பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கனகசபை பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று பின்னர் அனைவரும் கனகசபை மீது ஏறி நின்று தரிசனம் செய்யலாம் என அனுமதி வழங்கப்பட்டது. இருந்தும் அங்குள்ள தீட்சிதர்கள் இன்னும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேற்று இந்த கனகசுமை பிரச்சனை இன்னும் பூதாகரமாக வெடித்தது. சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள்,  ‘கனகசபை மீது வெள்ளியாட்கள் பக்தர்கள் ஏறக்கூடாது’ என பதாகை வைத்துள்ளனர். இந்த பதாகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முற்பட்டு உள்ளனர். ஆனால் அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அங்கு அறநிலையத்துறை செயல் அதிகாரி சரண்யா மற்றும் அரசு அதிகாரிகள் அங்குள்ள தீட்சிதர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் அவர்கள் விடாம்படியாக மறுப்பு தெரிவித்த காரணத்தால், அரசு அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் தடுத்த உள்ளிட்ட புகாரின் பெயரில் ஐந்து பிரிவுகளின் காவல் நிலையத்தில் தீட்சிதர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது பக்தர்கள் யாருமே ஏறக்கூடாது என்று வைக்கப்பட்ட பதாகையை அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்றினர். இதன் காரணமாக கனகசபையை பூட்டி தீட்சிதர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று கோட்டாட்சியர் முன்னிலையில் தீட்சிதர்கள் உடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Aavin milk - Heavy rain
Rohini (13) (1)
TN Weather Update
heavy rain
Mumbai Taj Attack
Southwest Bay of Bengal