தொழில் நிறுவனங்கள் நாள் விழா நாளை தொடக்கம்.!
பன்னாட்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னையில் நாளை நடைபெறுகிறது.
பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாடிட வேண்டும் என ஆணையிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற உள்ளது.
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ், 100 பேருக்கு ரூ.18.94 கோடி மானிய ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். அதனைத்தொடர்ந்து, பண்ருட்டியில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமம் மெய்நிகர் கண்காட்சியகத்தை திறக்கும் முதல்வர், 10 மாணவ அணிகளின் புத்தாக்க கண்டுப்பிடிப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குகிறார்.