செல்லூர் ராஜூ ஏன் அப்படி பேசினார் என நான் தொலைபேசியில் அவரிடம் விசாரிக்கிறேன் – ஜெயக்குமார்

Jayakumar ADMK

1000 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

ம.பொ.சியின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்.

தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தான் முடிவெடுக்கும். தேர்தல் நெருங்க நெருங்க பல கட்சிகள் எங்களுடன் வர உள்ளன. அது சஸ்பென்ஸ் என்பதால் அதையெல்லாம் சொல்ல முடியாது. மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், அம்மா உணவகம், மினி க்ளினிக் உள்ளிட்ட நாங்கள் திட்டங்களை அழித்து வருகிறது திமுக.

இதற்கு மக்கள் தக்க பாடம் விரைவில் கொடுப்பார்கள். வேங்கைவயல் சம்பவத்தில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, சமூகநீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதியில்லை. இத்தனை மாதங்களாகியும் இன்னும் குற்றவாளியை கண்டறிய  முடியவில்லை. இப்படி இருக்கும்போது சமூக நீதி பற்றி பேசுவதாக?, அவர்களுக்கு தகுதியே இல்லை, சமூக நீதி என்றால் அதிமுகதான்.

செந்தில் பாலாஜிக்கு உண்மையில் அறுவை சிகிச்சை நடைபெற்றதா? என்று மக்கள் கேட்கிறார்கள் என்றும் செந்தில் பாலாஜி தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் அமலாக்கத்துறை விரைவில் பதில் சொல்லும் எனவும் கூறினார். மேலும், நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சமீபத்தில் பேசிய கருத்துக்கு பதிலளித்து பேசிய, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அடுத்த தலைமுறை விஜய்தான் என செல்லூர் ராஜூ ஏன் அப்படி பேசினார் என நான் தொலைபேசியில் அவரிடம் விசாரிக்கிறேன் என கிண்டலாக கூறினார்.

அரசியல் என்பது பெரிய சமுத்திரம், அதில் யார் வேண்டுமானாலும் குதித்து நீச்சலடித்து மேலே வரலாம். அரசியலுக்கு வருபவர்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்றார். 1000 ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. திமுக போன்று மன்னர் பரம்பரை கிடையாது. அதிமுக என்பது ஜனநாயக இயக்கம் எனவும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்