சிறைவாசிகளுக்காக பெட்ரோல் பங்க்குகள்.. அமைச்சர் ரகுபதி அறிவிப்பு
சிறை நிர்வாக சார்பில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.
சிறைவாசிகள் பணிபுரியும் வகையில் பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட உள்ளன என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். சென்னை, மதுரை, கோவை, வேலூர், பாளையங்கோட்டை சிறை நிர்வாக சார்பில் பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட உள்ளது.
புழல் பகுதியில் உருவாக்கப்படும் பெட்ரோல் பங்க்குகள் ஷிப்ட் முறையில் பணிபுரியும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன. மேலும், சிறைத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.