ஆப்பிள் ‘விஷன் ப்ரோ’வில் இப்படி ஒரு அம்சமா..? இதற்காகவே இதை வாங்கலாம்..!

AppleVisionPro

ஆப்பிள் விஷன் ப்ரோ எந்த ஒரு மேற்பரப்பையும் தொடுதிரையாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என டெவலப்பர் ஸ்டீவ் ட்ரட்டன் கண்டுபிடித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் தனது புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் தாறுமாறான புதிய ஹெட்செட்டை அறிமுகம் செய்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

AppleVP
AppleVP [Image Source : Twitter/@IGNJapan]

இந்த விஷன் ப்ரோவில் உள்ள கேமரா மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அதனை பார்க்கும் போது, அது புகைப்படம் போல அல்லாமல், நீங்கள் உண்மையாகவே அங்கே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விஷன் ப்ரோவை, ஒரு ஸ்மார்ட்போன் போல பயன்படுத்தலாம்.

அதாவது, நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் செயல்பாடுகளான வீடியோ கால் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, யூடியூப், குரோம் போன்றவற்றை, இந்த ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்டிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனை கட்டுபடுத்துவதற்கு உங்களது குரல் அல்லது கை செய்கைகளை பயன்படுத்தலாம்.

AppleVisionPro
AppleVisionPro [Image Source : Twitter/@Techbadgujar]

தற்போது, ஆப்பிள் விஷன் ப்ரோ எந்த ஒரு சாதாரண மேற்பரப்பையும் தொடுதிரையாக (Touch Screen) மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்று டெவலப்பர் ஸ்டீவ் ட்ரட்டன் கண்டுபிடித்துள்ளார். இதனால் ஹெட்செட்டில் உள்ள பயன்பாடுகளுக்கு, ஒரு மேற்பரப்பை தேர்ந்தெடுத்து, அதனை நாம் பயன்படுத்தும் செயலி அல்லது பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் தொடுதிரை ஆக மாற்ற முடியும்.

எடுத்துக்காட்டாக, ஆப்பிள் மியூசிக் செயலியை கட்டுப்படுத்த, தங்கள் மேசையை ஒரு விசைப்பலகையாக மாற்ற முடியும். இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 3,499 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி, இதன் தற்போதைய விலை ரூ.2.86 லட்சமாக இருக்கும்.

ஆனால், இந்த ஹெட்செட் இன்னமும் மேம்பாட்டில்தான் உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமானவுடன் இந்த அற்புதமான சாதனத்தை ஆப்பிள் பயனர்கள் மட்டுமல்லாமல், மற்ற தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களும் இதனை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்