25-ஆவது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை..!

Tamilisai EB
பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என ஆளுநர் தமிழிசை ட்வீட்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், 25ஆவது வந்தே பாரத் ரயில்
வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆளுநர் தமிழிசை அவர்கள் சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 25-ஆவது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பார்வையிட்டார்.
பெரம்பூர் ஐசிஎப் ரயில்வே மேலாளர்,  அலுவலக பணியாளர்கள் மற்றும்  ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆளுநர் தமிழிசை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னை,ஐ.சி.எப் இரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று வெற்றிகரமாக தயாரிக்கப்பட்ட 25-வது வந்தேபாரத் அதிவிரைவு இரயிலை பார்வையிட்டு சென்னை,ஐ.சி.எப் இரயில்வே மேலாளர்,அலுவலகப் பணியாளர்கள் ஊழியர்கள் அனைவரையும் பாராட்டி கெளரவித்தேன்.
வெளிநாடுகளில் தயாரித்து இறக்குமதி செய்யப்பட்ட இரயில்களை தற்போது அதிநவீன வசதிகளுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் இரயில்களை நாட்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்