தோனியின் ஒரு போட்டோ.! 3 மணி நேரத்தில் 30 லட்சம் பதிவிறக்கம்.! நன்றி தெரிவித்த கேண்டி கிரஸ் நிறுவனம்.!
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சமீபத்திய விமான பயணத்தின்போது, ஐபேடில் Candy Crush கேம் விளையாடிய புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில், அது வைரலாகி தற்போது #CandyCrush ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதாவது, தோனி விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த போது, விமான பணிப்பெண் ஒருவர் பல சாக்லைட்டுகளை கிஃப்டாக கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஐபேடில் Candy Crush கேம் விளையாடியதை ரசிகர்கள் பார்த்தனர்.
இதனை தொடர்ந்து, தோனியின் இந்த வீடியோ வெளியான நிலையில், சுமார் 3 மணி நேரத்தில் 30 லட்சம் பேர் Candy Crush-ஐ பதிவிறக்கம் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று உலா வருகிறது.
மேலும் இதற்கு, கேண்டி கிரஸ் ஃபேன் பேஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், தோனிக்கு நன்றி தெரிவித்து ஒரு ட்வீட்டை வெளியிட்டது. அதில், வெறும் 3 மணிநேரத்தில் 3.6 மில்லியன் புதிய பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளோம். இதனால், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு நன்றி. உங்களால் தான் நாங்கள் இந்தியாவில் டிரெண்டிங்கில் இருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
Just In – We Got 3.6 Million New Downloads in just 3 hours.
Thanks to the Indian Cricket Legend @msdhoni . We are Trending In India Just Because Of You.
~ Team Candy Crush Saga pic.twitter.com/LkpY8smxzA
— Candy Crush Saga Official (@teams_dream) June 25, 2023