இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி.! உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி.!

Minister Senthil balaji

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதன் பிறகு இதய அறுவை சிகிச்சை காரணமாக காவேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் காவேரி மருத்துவமனையில் புழல் சிறை கட்டுப்பாட்டில் தனி வார்டில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.

இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல், உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் பொறுப்பில் இருந்த இரு துறைகளும் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. அப்போது, தமிழக முதல்வர் ஆளுநருக்கு விடுத்த பரிந்துரையில் இரு துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்வதாகவும், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரும் விவகாரம் குறித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ரவி மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர்கள் வாதிடுகையில், அமைச்சர்களை நியமிப்பது ஆளுநரின் விருப்பம். செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் இருப்பதாலும் அவர் இதய அறுவை சிகிச்சை செய்து இருப்பதாலும் அவரால் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. எனவே இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர அனுமதிக்க கூடாது என வாதிட்டனர்.

அதன்பிறகு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர விருப்பமில்லை என்று தான் ஆளுநர் கூறி இருக்கிறார். அவரை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஆளுநர் ரவி கூறவில்லை. மேலும், தற்போது செந்தில் பாலாஜி விசாரணையில் தான் இருக்கிறார். குற்றவழக்கில் இன்னும் தண்டனை வழங்கப்பட வில்லை.2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மட்டுமே பதவி விலக நேரிடும் எனவும், ஆளுநருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி இந்த வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஒத்திவைத்ததனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்