மகளிர் உரிமை தொகை..! முதல்வர் ஆலோசனை தொடங்கியது..!
சென்னை தலைமைச்செயலகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
ஆளும் கட்சியான திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம். செப்டம்பர் 15-ஆம் தேதி மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் நடைமுறைகள் குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தியமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர்கலந்து கொண்டுள்ளனர்.