இந்திய கால்பந்து அணியின் முரட்டு சம்பவம்.. ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறும் எதிரணிகள்..!

கடந்த 8 சர்வதேச போட்டிகளில் இந்திய கால்பந்தாட்ட அணி எதிராணியினரை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் தடுத்துள்ளது.
உலக கால்பந்து வீரர்களை நாம் போற்றி புகழ்ந்து வரும் அதே வேளையில் நமது நாட்டு கால்பந்து ஆட்ட வீரர்களும் சர்வதேச அணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர். கடந்த சில போட்டிகளில் தொடர்ச்சியாக இந்திய அணிக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் சர்வதேச அணியினர் திணறி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இந்தியா – நேபாளம் அணியினர் மோதிய போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான், லெபனான் (2 போட்டிகள்), மங்கோலியா, வனுவாடு, கிர்கிஸ் குடியரசு, மியான்மர் என கடந்த 8 போட்டிகளில் எதிராணியினரை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் இந்தியா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் லெபனான் அணியுடனான ஒரு போட்டி டிரா உட்பட மற்ற அனைத்து போட்டிகளிலும் சுனில் சேஷ்த்ரி தலைமையிலான இந்திய கால்பந்காட்ட அணி வெற்றி பெற்றுள்ளது.