காவேரி மருத்துவமனையில் சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார் செந்தில் பாலாஜி…!
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் நான்காவது மாடியில் உள்ள சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நெஞ்சுவலி காரணமாக தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 21-ஆம் தேதி அதிகாலை 5.15க்கு இதய ரத்த நாளங்கள் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சுமார் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்திருந்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது காவேரி மருத்துவமனையில் நான்காவது மாடியில் உள்ள சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டார்.