இன்று மாலை 7 மணிக்கு நேரலை – மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ட்வீட்

wrestlers protest

பரவும் தவறான தகவல் குறித்து இன்று மாலை 7 மணிக்கு காணொலி நேரலை விளக்கமளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர்கள் ட்வீட்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாக அவரை கைது செய்யக்கோரி ஒரு மாதத்துக்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் தற்காலிகமாக தங்களது போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்கள் கடந்த ஜனவரி மாதம் முன்வைக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யவே வீரர்கள் சுப்ரீம் கோர்ட் வரை சென்று வழக்கு தொடர வேண்டி இருந்தது. பின்னர் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசியல்வாதிகள் தங்களின் சொந்த நலனுக்காக சமூகத்தில் எங்களை குறித்து பரப்பும் தவறான விசயங்கள் தொடர்பாக இன்று மாலை 7 மணிக்கு காணொலி நேரலை வாயிலாக விளக்கமளிக்க உள்ளோம். இந்த நேரலை நிகழ்ச்சியில் மக்கள் திரளாக இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்