பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் மீண்டும் கைது.!

விஜய் குறித்து அவதூறாக பதிவிட்டதாக பாஜக ஆதரவாளர் உமா கார்த்திகேயன் கோவையில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

விஜய் குறித்து அவதூறாக பதிவிட்டதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னையில் புகார் அளித்திருந்தனர். பெரியார், கருணாநிதி குறித்து உமா கார்த்திகேயன் அவதூறு பரப்பியதாக ஏற்கனவே திமுகவினர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திமுகவினர் அளித்திருந்த புகார் அடிப்படையில் உமா கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, உமா கார்த்திகேயனை கோவை சிறையிலிருந்து சென்னை அழைத்து செல்கின்றனர் சென்னை காவல் துறையினர்.

அதாவது, கோவையில் பதிவு செய்யபட்ட வழக்கில், நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, திங்கட்கிழமை ஜாமீன் கிடைக்கவிருந்த நிலையில், தற்போது சென்னையில்  கடந்த 18ம் தேதி பதியபட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யபட்டு சென்னை புழல் சிறைக்கு அனுப்பபட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்