பாலியல் வழக்குகளில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் – மதுரைக் கிளை உத்தரவு
பாலியல் வழக்குகளில் உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை அருகில் உள்ள பெண் மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பாலியல் வழக்குகளில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி மதுரைக் கிளை நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாலியல் வழக்குகளில் இது போன்ற முறையை பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை முறையாக பின்பற்ற அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையான வழிகாட்டுதல்களை டிஜிபி தரப்பில் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்களை சீலிடப்பட்ட முறையில் பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளது.