எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகள்.. நேர்காணல் மூலம் தேர்வு.!
நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர், உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கு வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (23-ஜூன்-2023) முதல் ஜூலை 24ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- உதவி பேராசிரியர் – 47.
- பேராசிரியர் – 11.
கல்வித்தகுதி :
- காலிப்பணியிட துறைக்கேற்ற முதுகலை பட்டம் மற்றும் Ph.D முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
- அதிகபட்சம் ரூ.2,00,000/- (தகுதி அடிப்படையில்).
வயது வரம்பு :
- உதவி பேராசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது 50.
- பேராசிரியர் பணிக்கு அதிகபட்ச வயது 58.
- அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
- நேர்காணல் வாயிலாக தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 24 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 27 ஜூலை 2023.
விண்ணபக்கட்டணம் :
- பொதுப்பிரிவு – ரூ.2000/-
- SC/ST பிரிவினருக்கு – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :
- நாக்பூர் எய்ம்ஸ் அதிகாரபூர்வ தளமான aiimsnagpur.edu.in க்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, அதற்கான நகலை சேர்த்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Executive Director, AIIMS Nagpur,
Administrative Block, Plot no.2, Sector -20,
MIHAN,
Nagpur-441108.