பிரதமராகும் தகுதி இவருக்கு மட்டுமே! யார் யாரோ முதல்வர் என சொல்லும்போது விஜய் ஏன் வரக்கூடாது? – செல்லூர் ராஜூ

Sellur Raju

எடப்பாடி பழனிசாமி தான் எதிர்காலத்தில் பிரதமர் வேட்பாளர் என்பது போல செல்லூர் ராஜூ பேட்டி.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா, அதில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் குறித்து படிக்கச் வேண்டும் என்ற பேச்சு மற்றும் அவரது அரசியல் வருகை குறித்து தான் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டு, இதற்கு அவர்கள் தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக் கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது?, விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்தார். இதன்பின் பேசிய அவர், அதிமுக – திமுக என்பது தான் தமிழநாட்டு அரசியல், இதிலிருந்து மாறுவதற்கு வழியில்லை.

எத்தனையோ கட்சிகள் வரும் போகும், ஆனால், எப்போதும் அதிமுக – திமுக தான். திமுக – பாஜக என்று பாஜகவினர் சொன்னால் அதை எடப்பாடி பழனிசாமி விடமாட்டார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிரதமராகும் தகுதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது. மோடி பிரதமராவர் யாராவது நினைத்தார்களோ? அவர் முதலமைச்சராவர் என எதிர்பார்த்தர்களா? என கேள்வி எழுப்பினார்.

அவரை சாதாரண ஆர்எஸ்எஸ் தொண்டராக இருந்தவர், அவருடைய உழைப்பால் உயர்ந்தவர். அதுபோல எடப்பாடி பழனிசாமியும் உயர்வார். எடப்பாடி பழனிசாமியின் திறமையை பார்த்து கூட, தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என அமித்ஷா கூறியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். மேலும், பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனம் இல்லை. உப்புக்கு சப்பாக தான் அந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தின் தலைவர் யார் என்பது தான் போட்டியாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்