மேல் வரியை குறைத்தது தமிழக அரசு: குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவிப்பு.!

chennaiWaterBoard

சென்னையில் குடிநீர் வரியை தாமதமாக செலுத்துவோருக்கு விதிக்கும் மேல்வரி 1%ஆக குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜூலை முதல் நுகர்வோருக்கான மேல் வரி1%ஆக குறைக்கப்படும். சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளிலும் வரி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அறிக்கையில், ஜூலை 1ம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர்/கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல் வரி மாதத்திற்கு 1.25 என்ற சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்கப்படும்.

தற்போது, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மாதத்திற்கு 1.25% என்ற விகிதத்தில் மேல் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நுகர்வோர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் மேல் வரி 1.25% இருந்து ஜூலை 1ம் தேதி முதல் 1% குறைத்திட சென்னை குடிநீர் வாரியம் தீர்மானித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்