100 க்கும் மேற்பட்ட இந்திய தொல்பொருட்களை திருப்பித் தர அமெரிக்கா முடிவு…பிரதமர் மோடி.!
100 க்கும் மேற்பட்ட இந்தியாவின் தொல்பொருட்களை அமெரிக்கா திருப்பித் தரவுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால 100க்கும் மேற்பட்ட இந்திய தொல்பொருட்களை திருப்பித்தர முடிவு செய்துள்ள அமெரிக்க அரசாங்கத்தை பாராட்டுவதாக, பிரதமர் மோடி தனது அமெரிக்க பயணத்தின்போது வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் உரையாற்றும் போது தெரிவித்தார்.
பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறும்போது, நமது இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கூறும் பல தொல்பொருட்கள் சர்வதேச சந்தைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன, இதனை திருப்பித்தர முடிவு செய்த அமெரிக்க அரசின் செயலால் தான் மகிழ்ந்ததாகக் கூறினார்.
#WATCH | PM Narendra Modi tells the Indian diaspora, “I am happy that the American government has decided to return more than 100 antiquities of India that were stolen from us. These antiquities had reached the international markets. I express my gratitude to the American… pic.twitter.com/2CLumxex3Y
— ANI (@ANI) June 24, 2023
அமெரிக்க அரசின் இந்த செயல் நம் இந்திய-அமெரிக்க உறவின் வலிமையைக்காட்டுகிறது. பிரதமர் மோடி 2014இல் பதவியேற்றதன் பின் பலமுறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவிலிருந்து பறிபோன பல பழங்கால பொருட்களை மீட்டுக்கொண்டு வந்துள்ளார். மொத்தம் 251 பழம்பொருட்கள் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.