பக்கத்துக்கு வீட்டு மாடியில் பதுக்கப்பட்ட 2 கோடி ரூபாய்.! லஞ்ச ஒழிப்புத்துறையில் மொத்தமாக சிக்கிய ரூ.3 கோடி.!
ஒடிசாவில் அரசு அதிகாரி வீட்டில் கணக்கில் வராத 3 கோடி ருபாய் அளவிலான பணம் லஞ்சஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்டது.
ஒடிசா மாநிலம் நபாரங்ப்பூர் மாவட்ட துணை ஆட்சியராகா பொறுப்பில் இருக்கும் பிரசாந்த் குமாரின் வீட்டுக்கு லஞ்சஒழிப்பு காவல்துறையினர் சோதனைக்காக சென்றனர். இந்த சோதனை அறிந்தததும் அவரது வீட்டில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பக்கத்து வீட்டுக்கு மாற்றியுள்ளனர்.
இதனை சோதனையில் கண்டுபிடித்த ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறையினர் பக்க வீட்டில் இருந்து அட்டை பெட்டிகள் மூலம் தூக்கி எறியப்பட்ட 2 கோடி ரூபாய் மற்றும் வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்ட 99.35 லட்சம் என மொத்தமாக 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிரசாந்த குமார் வீட்டில் இருந்து மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 3 கோடி ரூபாய் தான் ஒடிசா லஞ்ச ஒழிப்புத்துறையால் கைப்பற்றப்பட்ட 2வது அதிகபட்ச பணம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.