மறக்க முடியுமா? இதே நாளில் தோனி தலைமையில் இந்தியா 2010 ஆசியக்கோப்பையை வென்றது.!
13 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் தோனி தலைமையிலான இந்திய அணி ஆசியக்கோப்பையை வென்று சாதனை படைத்தது.
2010 ஆசியக்கோப்பை:
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக்கோப்பையை, 15 வருடங்களுக்கு பின் (அதாவது 1995க்கு பிறகு) தோனி தலைமையிலான இந்திய அணி, வெற்றி பெற்றது இந்த நாளில் தான். 2010 ஆசியக்கோப்பை தொடரில் மறக்க முடியாத பல சம்பவங்கள் அரங்கேறின. தோனி தலைமையில் இந்திய அணி வெற்றிப் பாதையில் ஏறுமுகத்துடன் சென்று கொண்டிருந்தது.
டி-20 உலக கோப்பை:
2007 ஆம் ஆண்டு கேப்டன் ஆக அறிமுகமான முதல் தொடரிலேயே இந்திய அணிக்காக டி-20 உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த தோனி தலைமையில் இந்தியா 2010 காலகட்டங்களில் சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருந்தது. தோனி தலைமையேற்றது பின் இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்களும் கொண்டு வரப்பட்டன.
4 அணிகள்:
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்ற 2010 ஆசியக்கோப்பை தொடரில், தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்து இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பைனலுக்கு முன்னேறின. இந்த ஆசியக்கோப்பை இறுதி போட்டியில் டாஸ் என்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணிக்கு 269 ரன்கள் என்று வலுவான இலக்கை நிர்ணயித்தது.
Most runs for India in Asia Cup 2010:
Gambhir Gambhir – 203 runs
MS Dhoni – 173 runs
Rohit Sharma – 132 runs
Dinesh Karthik – 106 runsMost wickets for India in Asia Cup 2010:
Praveen Kumar – 6 wickets
Zaheer Khan – 6 wickets
Ashish Nehra – 6 wickets
Ravindra Jadeja – 4… pic.twitter.com/4yVtmKwP1E— Johns. (@CricCrazyJohns) June 24, 2023
தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 66 ரன்கள் குவித்தார். அதன் பிறகு களமிறங்கிய இலங்கை அணியை, இந்தியா 44 ஓவர்களுக்குள் 187 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டனர். இந்திய அணியில் நெஹ்ரா சிறப்பாக பந்துவீசி 4/40 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணி வெற்றிக்கு மிகப்பெரும் தூணாக அமைந்தார்.
இந்தியா ஆசிய சாம்பியன்:
இந்தியாவும் 81 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, ஆசியக்கோப்பையை 15 ஆண்டுகளுக்கு பின் வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாகவும், ஷாஹித் அப்ரிடி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரசிகர்களால் பெரிதும் , பரம போட்டி எதிரிகளாகக் கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதிச்சுற்று போட்டியில் ஒருமுறை மோதின.
பரம எதிரிகள்:
இந்த 2010 இந்தியா- பாகிஸ்தான் போட்டியையும் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள். 268 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணியில் கம்பிர் 83 ரன்களும், தோனி 56 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே அதில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
கம்பிர்-கம்ரான்:
அதேபோல் கம்பிர் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாக் வீரர் கம்ரான் அக்மல் ஏதோ அவரிடம் சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட தோனி சமாதானப்படுத்தி கம்பீரை அழைத்து செல்வார். போட்டி முடியும் போதும் ஹர்பஜன் சிங்குடன், பாகிஸ்தானின் சோயப் அக்தர் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்.
ஹர்பஜன்-அக்தர்:
இதனால் ஆட்டம் மேலும் பரபரப்பானது, இந்த போட்டியில் அக்தரின் வார்த்தையால் கோபமான ஹர்பஜன் சிங் இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு தேவையான கடைசி ரன்களை சிக்சர் மூலம் அடித்து வெற்றியை கொண்டாடிய விதம் இன்னமும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
இதன் பிறகு இந்திய அணி தோனி தலைமையில் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை வென்றதையடுத்து இளம் இந்திய வீரர்கள் படையுடன், இங்கிலாந்தில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரையும் வென்று காட்டியது. இருந்தாலும் அதன் பிறகு இந்திய அணியால் எந்த ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லை என்பது வருந்தத்தக்கது தான்.