மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு! 27ம் தேதி NExT தேர்வு கருத்தரங்கம் – என்எம்சி அறிவிப்பு
எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு 27ம் தேதி NExT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு.
அனைத்து இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கும் வரும் 27-ஆம் தேதி NExT தேர்வு கருத்தரங்கம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனைத்து மாணவர்களும் NEXT தேர்வு குறித்து இணையதள காணொளி கருத்தரங்கில் பங்கேற்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரி எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்களாக பங்கேற்க வேண்டும் எனவும் உத்தரவிப்பட்டுள்ளது. நெஸ்ட் தேர்வு குறித்து அச்ச உணர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்குவதற்காக கருதரங்கத்திற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது
இதனிடையே, எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர்களுக்கு அடுத்தாண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்(நெக்ஸ்ட்) தேர்வு நடத்தப்பட உள்ளது. நெக்ஸ்ட் தேர்வு என்பது ஒரு பொதுவான தகுதி இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வாகவும், நவீன மருத்துவம் மற்றும் முதுகலைப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான உரிமத் தேர்வாகவும் இருக்கும். மேலும், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான ஸ்கிரீனிங் தேர்வாகவும் ‘‘நெக்ஸ்ட்’’ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.