மின் கட்டண முறையில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு!
time of day என்ற முறையில் கட்டணத்தை அறிமுகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரில் விதிகளை சீரமைத்தல் என மாற்றங்கள் கொண்டு வர முடிவு.
2024 ஏப்ரல் மாதம் முதல் மின்கட்டணத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20% வரை கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சூரி ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10-20% கட்டணத்தை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறைக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. time of day என்ற முறையில் கட்டணத்தை அறிமுகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரில் விதிகளை சீரமைத்தல் என பல்வேறு மாற்றங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 10 கிலோ வாட் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகபட்ச தேவை கொண்ட வணிகம் மற்றும் தொழில் துறை நுகர்வோருக்கும், இதுபோன்று, 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் டைம் ஆப் டே கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.