கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மோசடி வழக்கில் கைது.!

KPCC Sudhakaran

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மோசடி வழக்கில் கைது செய்யபட்டு, பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) தலைவர் கே சுதாகரன், மோசடி வழக்கு தொடர்பாக, சுமார் 7 மணிநேரம் விசாரிக்கப்பட்ட பின்னர் நேற்று கைது செய்யப்பட்டார்.ஆனாலும், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமை கேரள உயர்நீதிமன்றம், ஜூன் 23இல் விசாரனைக்கு ஆஜராகுமாறு சுதாகரனுக்கு உத்தரவிட்டது. மேலும் அவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டால், அவருக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமின் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. புகார்தாரர்கள் சுதாகரன் முன்னிலையில் மான்சன் மாவுங்கல் என்பவருக்கு பணம் கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் சுதாகரன் விசாரிக்கப்பட்டார்.

இதனால் புகார்தாரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டது எனக்கூறி, வழக்கில் சுதாகரன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு குற்றப்பிரிவு கூடுதல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சுதாகரன் கூறும்போது, மாவுங்கல் தன்னைப் பற்றி தவறான தகவல்களை அளித்து பல நபர்களை ஏமாற்றி அவர்களிடம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

மொத்தம் ரூ.10 கோடி மோசடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் மாவுங்கல் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். இதனால் சுதாகரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்