நடிகர் போஸ் வெங்கட்டிற்கு நேர்ந்த சோகம்.! ஒரே நாளில் உடன்பிறப்புகள் அடுத்தடுத்து மரணம்.!
ஒரே நாளில் தனது சகோதரி, மற்றும் சகோதரரையும் நடிகர் போஸ் வெங்கட் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகராக இருந்து அடுத்ததாக, பெரிய திரையிலும் தடம் பதித்த பிரபல நடிகரும், இயக்குனருமான போஸ் வெங்கட், சிவாஜி, கோ, தலைநகரம் உள்ளிட்ட படங்களில் மூலம் பெரிய திரைக்கும் பரிச்சயமானவர். போஸ் வெங்கட், தனது சகோதரி இழந்த சோகம் முடிவதற்குள் ஒரே நாளில் தனது சகோதரரையும் இழந்துள்ளார்.
இவரது சகோதரி வளர்மதி, உடல்நல குறைவால் உயிரிழந்த செய்தி கேட்டு, அவரது இறுதி சடங்கிற்காக சென்று இருந்தார், அப்போது போஸ் வெங்கட்டின் சகோதரர் ரங்கநாதனும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஒரே நாளில் தனது சகோதரர் மற்றும் சகோதரியை இழந்து வாடும் போஸ் வெங்கட்டிற்கு, பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த நாள் அவருடைய வாழ்வில் மிகவும் துயரமான நாளாக மாறிவிட்டது.