இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உதவும்..!
இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவை ஏற்படுத்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உதவும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.
சீனாவின் கிங்டாவோ நகரத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் 18வது உச்சிமாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைனும் கைகுலுக்கிப் பேசிக் கொண்டனர்.
இந்நிலையில்,இந்தியா-பாகிஸ்தான் இடையே நல்லுறவு ஏற்பட, ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு பாலமாக இருக்கும் என சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி (Wang yi) தெரிவித்துள்ளனர்.
ஒருவருக்கு ஒருவர் நல்ல நட்புறவை மேற்கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் உறுதி பூண்டுள்ளதாகவும் வாங் யி கூறியுள்ளார்.