இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் மனமார்ந்த பாராட்டுக்கள் – முதல்வர் ட்வீட்
விருது பெற்ற உதயசங்கர் மற்றும் ராம் தங்கம் இருவருக்கும் முதல்வர் பாராட்டு.
“ஆதனின் பொம்மை” நூலுக்காக எழுத்தாளர் உதயசங்கருக்கு இவ்வாண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘திருக்கார்த்தியல்’ என்ற சிறு கதைக்காக திரு. ராம் தங்கம் அவர்களுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் பாராட்டு தெரிவித்து முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு ஆதமின் பொம்மை-யை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக பால புரஸ்கார் விருது பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்; இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த திருக்கார்த்தியால் சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது பெற்றுள்ள ராம் தங்கம் அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்’ என பதிவிட்டுள்ளார்.
நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியைத் தன் கதைக்களமாய்க் கொண்டு #ஆதனின்பொம்மை-யை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக #BalaSahityaPuraskar பெற்றுள்ள எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கும்; இளமையில் பசி எனும் வலியை நாஞ்சில் நாட்டு மொழியில் மிக அழுத்தமான விவரிப்புகளால் பதிவு செய்த… pic.twitter.com/nvPNa1qeEN
— M.K.Stalin (@mkstalin) June 23, 2023