பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க கட்டுப்பாட்டு மையம்..! சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைப்பு..!

ChennaiSafeCityProjects

பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிக்கவும், நகரத்தில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும், சென்னை சேஃப் சிட்டி திட்டங்களின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், சென்னை முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட முக்கியமான 1,750 இடங்களில், 5,250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் முதற்கட்டமாக மக்கள் அதிகம் கூடும் 1,336 இடங்களில் 4,008 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சிசிடிவி கேமராவில் பதிவாகும் காணொளி, கட்டுப்பாட்டு மையத்தில் கட்டுப்பாடு மையத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் சாலை விதி மீறல் மற்றும் நம் கண்ணுக்கு தெரியாமல் நடக்கும் குற்றங்கள் பற்றி எளிதாக கண்டறிந்து விடலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்