செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை – அமலாக்கத்துறை
செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை அமலாக்கத்துறை தகவல்.
செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு ஜூன் 23-ஆம் தேதி வரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு சென்னை முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருவதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க இயலவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்பதால் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை என்று கடந்த வாரம் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 28ஆம் தேதி நீதிமன்ற காவல் முடியும் நிலையில் காணொளி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆதரப்படுத்தப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.