ஆதனின் பொம்மை நாவல்..! எழுத்தாளர் உதயசங்கருக்கு புரஸ்கார் விருது அறிவிப்பு..!

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழில் ஆதனின் பொம்மை என்ற நாவலை எழுதிய தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் உயரிய விருதான பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யுவ புரஸ்கார் விருது திருக்கார்த்தியல் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ராம்தங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.