சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயிலில் இருந்து வெளியேறிய புகை…! பயணிகள் அலறியடித்து ஓட்டம்..!
சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் அலறியடித்துக் கொண்டு ஓடிய பயணிகள்.
சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரலில் இருந்து மும்பை நோக்கி சென்ற எல்டிடி விரைவு ரயிலில் புகை வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின் ஏசி பெட்டியில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
இன்ஜின் ரயில் பெட்டியில் இணைப்பு பகுதியில் உள்ள மின்வட கம்பியில் ஏற்பட்ட மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. புகை வெளியேறியதையடுத்து பயணிகள் அலறியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து வெளியில் குதித்தனர். இதுகுறித்து விளக்கமளித்த தெற்கு ரயில்வே, தீ விபத்து ஏதுமில்லை, மின் கசிவினால் புகை வெளியேறியதால் ரயில் நிறுத்தப்பட்டது என விளக்கம் அளித்துள்ளது.