மர்ம கும்பலால் கடத்தப்பட்ட ராப் பாடகர் 10 மணி நேரத்தில் மீட்பு…!

dev anand

சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார்.

மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். 5 பேரிடம் ₹2.5 கோடி கடன் வாங்கியுள்ளதால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், திருவேற்காடு போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வாகன தணிக்கையின்போது அவரை மீட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தலில் ஈடுபட்டதாக முத்துப்பாண்டி, கார்த்தி, முத்து, கருப்பசாமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்