சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு – ஜூன் 27ம் தேக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் கிளை!
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்னும் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க பட வேண்டும் என சிபிஐ தரப்பில் தகவல்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதி ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. சிபிஐ தரப்பில் இன்னும் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்க பட வேண்டும் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை 3 மாதத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் இன்னும் 6 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என சிபிஐ தரப்பில் தகவல் கூறப்பட்டது. அதுமட்டுமில்லாம், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையிலுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் கிளை ஆணையிட்டிருந்தது. இந்த நிலையில், மேலும் கால அவகாசத்தை நீட்டிப்பு வழங்கி உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை ஜூன் 27ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.