பாஜக ஆதரவாளரர் உமா கார்க்கி மீது சைபர் கிரைம் காவல் விசாரணை.! கோவை நீதிமன்றம் அனுமதி.!
கோவை பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் சைபர் கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
கோவை சிங்காநல்லூரை சேர்ந்த உமா கார்த்திகேயன் உமா கார்க்கி என்ற பெயரில் சமூகவலைத்தளத்தில் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழக முதல்வர் பற்றியும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றியும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
இந்த பதிவு தொடர்பாக திமுக ஐடி விங் பிரிவினர் கோவை சைபர் கிரைம் போலீசாரிடம், உமா கார்க்கி மீது தலைவர்கள் பற்றி அவதூறு விளைவிக்கும் விதமாக கருத்து பதிவிட்டதாக புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து அவதூறு வழக்கில் உமா கார்க்கி கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கோவை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உமா கார்க்கியை 2 நாள் காவலில் எடுக்க சைபர் கிரைம் போலீசார் அனுமதி கேட்டனர். அதனை மறுத்து இன்று ஒருநாள் மட்டும் சைபர் கிரைம் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.