ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபலமா?
பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. தற்போது, உலகம் முழுவதும் இந்த திரைப்படம் ரூ.400 கோடி வசூலித்துள்ளது.
படத்தின் டீஸர் வெளியான பிறகு, ரசிகர்களிடமிருந்து பெரும் பின்னடைவை எதிர்கொண்டது. ஏனெனில், படத்தின் மோசமான VFX மற்றும் CGI வேலைகள் சரியில்லா காரணத்தால் ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது.
இப்போது, ராமாயணத்தை தவறாக சித்தரித்ததை பார்வையாளர்களால் ஜீரணிக்க முடியாததால் பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கை குறைந்தது. பிரபாஸ் ராமர் வேடத்தில், கிருத்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலிகான் ராவணனாக நடித்திருந்தனர்.
ஆனால், இயக்குனர் ஓம் ரவுத் ராவணன் கதாபாத்திரத்திற்காக முதலில் அணுகியது நடிகர் சைஃப் அலிகான் இல்லையாம். முதன் முதலில் இந்த கதாபாத்திரத்திற்காக இயக்குனர், அஜய் தேவ்கனிடம் சென்றுள்ளனர். ஆனால், தனது பிஸியான நடிப்பு காரணமாக தேதி இல்லாததால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.