வெகு தூரம் பறந்த பந்து…அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்திய அஸ்வின்…வைரலாகும் வீடியோ.!!
டிஎன்பிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்து.
இதனையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கில் சேப்பாக் அணியில் முதலில் சந்தோஷ் சிவ், ஜெகதீசன் களமிறங்கினர். சேப்பாக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் திண்டுக்கல் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை எதிர்கொண்ட சஞ்சய் யாதவ் அந்த பந்தை சிக்ஸர்க்கு தூக்கி அடிக்க முயன்றார். அப்போது அந்த பந்து சரியான டைமிங் இல்லாத காரணத்தினால் சிக்ஸருக்கு போகாமல் மைதானத்திற்கு உள்ளே மிகவும் வெகு தூரமாக நடுவானில் பறந்தது.
This might seem like an @ashwinravi99 appreciation account but can you blame us when he pulls this off?! #TNPLOnFanCode #TNPL pic.twitter.com/44YTtk4Uxt
— FanCode (@FanCode) June 21, 2023
நடுவானில் பறந்த அந்தப் பந்தை அஸ்வின் சரியாக கவனித்துக் கொண்டு பாய்ந்து அசத்தலாக கேட்ச் பிடித்தார். அந்த வீடியோ, தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.