தமிழக முழுவதும் நாளை மறுநாள் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலைஞர் நூற்றாண்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் 10 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று அறிவித்துள்ளார். இந்த மெகா மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைத்து விதமான பரிசோதனைகளும் செய்து பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடைய பேசிய அமைச்சர், சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று காலை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அறுவை சிகிச்சைக்கு பின் நேற்று மாலை வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார் எனவும் தெரிவித்தார்.