அசாம் வெள்ளப்பெருக்கு..! 1.2 லட்சம் பேர் பாதிப்பு..!
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 1.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,000-ஐ தாண்டியது.
நேற்று, மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்கள் மற்றும் அங்கு உள்ள 85,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,19,830 ஆக உயர்ந்தது. அவர்களில் 48,967 பெண்கள் மற்றும் 17,652 குழந்தைகள் ஆவர். இந்த ஏற்பட்ட வெள்ளத்தினால் 780 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில், என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் மீட்புக்குழுவினர் படகுகள் மூலம் மொத்தம் 1,280 பேரை அப்பகுதிகளை விட்டு வெளியேற்றியுள்ளனர். போடோலாந்து பகுதியில் உள்ள தமுல்பூரில் அதிகபட்சமாக 565 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 10,591.85 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன