தமிழகத்தில் பாஜக ஒருபோதும் அரசியலில் வெற்றி பெற முடியாது – வைகோ
தமிழகத்தில் பாஜக ஒருபோதும் அரசியலில் வெற்றி பெற இயலாது என வைகோ பேட்டி.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அமைச்சர்கள் தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படையெடுத்தாலும் பெரியார் மண்ணில் அவர்கள் வெற்றி பெற முடியாது.
மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் வெற்றி பெற முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ அவர்கள், மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வர முடியாத அளவுக்கு அரசியல் சூழல் காணப்படுகிறது. வரும் தேர்தலில் பாஜக கண்டிப்பாக தோல்வியடையும். இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலைகள் உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக அணி 40 இடங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தமிழ்நாட்டிலிருந்து பாஜகவை மக்கள் ஒழித்து விடுவார்கள். இது பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் பக்குவப்படுத்திய மண். எனவே தமிழகத்தில் பாஜக ஒருபோதும் அரசியலில் வெற்றி பெற இயலாது என தெரிவித்துள்ளார்.