இந்த அறிவிப்பின் மீது தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி
கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி.
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கௌரிதா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர்
திரைப்பட பயிற்சி நிறுவனத்தின்
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்?இந்த அறிவிப்பின் மீது மாண்புமிகு @CMOTamilnadu உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். pic.twitter.com/wyPls5lXJD
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 21, 2023