ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் ஜோ ரூட் முதலிடம்..!

Joe Root

ஐசிசி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள ஆடவர் டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபசனை பின்னுக்குத் தள்ளி, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதல் இடத்திற்கு வந்துள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதன் மூலம் மார்க்கஸ் முதலிடத்தில் இருந்தார். ஆனால், ஜூன் 16ம் தேதி பர்மிங்காமில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்டில் ஜோ ரூட் 118* ரன்கள் எடுத்தார்.

அவரது அபாரமான முயற்சிகளால் ஐந்து இடங்கள் முன்னேறி, கடந்த ஆறு மாதங்களாக முதல் இடத்தில் இருந்த லாபசனை விட 10 புள்ளிகள் அதிகம் பெற்று நம்பர்-1 டெஸ்ட் பேட்டராக ஜோ ரூட் முதலிடம் பிடித்தார். இங்கிலாந்துக்கு எதிராக 13 ரன்கள் எடுத்ததன் விளைவாக லாபசன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்